/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இலவச வெள்ளாடு திட்டம் டாக்டர்கள் பணியிடம் நிரப்ப தீவிரம்இலவச வெள்ளாடு திட்டம் டாக்டர்கள் பணியிடம் நிரப்ப தீவிரம்
இலவச வெள்ளாடு திட்டம் டாக்டர்கள் பணியிடம் நிரப்ப தீவிரம்
இலவச வெள்ளாடு திட்டம் டாக்டர்கள் பணியிடம் நிரப்ப தீவிரம்
இலவச வெள்ளாடு திட்டம் டாக்டர்கள் பணியிடம் நிரப்ப தீவிரம்
ADDED : ஆக 20, 2011 11:51 PM
திருப்பூர்:தமிழக அரசின் இலவச வெள்ளாடு வழங்கும் திட்டம் துவங்குவதற்கு
முன்பாக மாநிலம் முழுவதும் காலியாக உள்ள கால்நடை டாக்டர், உதவியாளர்
பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி
தற்போது துவங்கியுள்ளது.புதியதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு இலவச
வெள்ளாடு வழங்கும் திட்டம், ஏழை பெண்கள் திருமணத்தில் தாலிக்கு தங்கம்,
இலவச அரிசி என பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
இலவச வெள்ளாடு வழங்கும் திட்டத்துக்காக மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை
எண்ணிக்கை; அதன் வகைகள்; வளர்ப்பு முறை; நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து
கடந்த 20 நாட்களுக்கு முன் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர்கள் மற்றும்
உதவி இயக்குனர்களுடன் அரசு ஆலோசனை நடத்தியது. இதன் பின், வெளிமாநிலங்களில்
இருந்து அல்லது உள்ளூர் சந்தைகளில் இருந்து ஆடுகளை வாங்கி பயனாளிகளுக்கு
தருவது எளிது; நோய் பாதிப்பும் குறைவாக இருக்கும் என கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.கடந்த சில நாட்களாக மாவட்டங்களில் உள்ள உள்ளூர் சந்தைகள்,
கால்நடை வளர்ப்பாளர்கள், கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள கிராமங்களின்
பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி
உடுமலை, தாராபுரம் பகுதிகளில் நடந்த கிராமசபைக் கூட்டங்களில் வெள்ளாடு பெற
விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் எழுதி பெறப்பட்டன. கலெக்டர்,
ஊராட்சி தலைவர் மற்றும் கிராமங்களில் உள்ள மூத்த பிரதிநிதிகள், பயனாளிகள்
தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இலவசமாக வெள்ளாடு வழங்கும் பட்சத்தில்
அவற்றுக்கு நோய் ஏற்பட்டால் தடுக்க முன்னெச்சரிக்கையாக மருந்து இருப்பு
குறித்து கணக்கெடுக் கப்பட்டது. தற்போது, மண்டலம் மற்றும் மாவட்ட வாரியாக
காலியாக உள்ள கால்நடை டாக்டர்களுக்கான விவரம் கணக்கெடுக்கப்பட்டு
வருகிறது.கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' வெள்ளாடு வழங்குவதற்கு
முன்பாக காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இதற்காக, மாவட்ட முழுவதும் இருந்து விவரம் பெறப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு
அலுவலகத்தின் மூலம் டாக்டர்களின் உதவியாளர் நியமிக்கப்படலாம்' என்றார்.


