/உள்ளூர் செய்திகள்/மதுரை/நிலமோசடி, ஆக்கிரமிப்பு கலெக்டர் கண்டிப்புநிலமோசடி, ஆக்கிரமிப்பு கலெக்டர் கண்டிப்பு
நிலமோசடி, ஆக்கிரமிப்பு கலெக்டர் கண்டிப்பு
நிலமோசடி, ஆக்கிரமிப்பு கலெக்டர் கண்டிப்பு
நிலமோசடி, ஆக்கிரமிப்பு கலெக்டர் கண்டிப்பு
ADDED : ஆக 12, 2011 01:35 AM
மதுரை : மதுரையில் கலெக்டர் சகாயம் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க, ரவுடிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை திறம்பட செயலாற்ற, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு, போலீஸ் மற்றும் வருவாய்த் துறையிடம் உள்ளது. நிலமோசடி, ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஒருவருக்கு சாதகமாகவோ, பட்டா மாறுதலுக்கு ஒருவருக்கு உடந்தையாகவோ அதிகாரிகள் செயல்படக் கூடாது. ஆர்.டி.ஓ.,க்கள் குற்றவியல் சட்டமுறைகளை நடைமுறைப் படுத்தினால் குண்டர் சட்டம் வேண்டியதிருக்காது. ரவுடிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். நிலமோசடி தொடர்பாக அந்தந்த பகுதிகளில் வி.ஏ.ஓ.,க்களிடம் ஆவணங்களைப் பெற்று அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தப்புரம், வில்லூர் பகுதிகளில் பலமுறை அமைதிக் கூட்டம் நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இருசமூக இளைஞர்களுடன் பேசி 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும், என்றார். டி.ஆர்.ஓ., முருகேஷ், துணை கமிஷனர் திருநாவுக்கரசு, நேர்முக உதவியாளர் அலிஅக்பர், ஆர்.டி.ஓ.,க்கள் துரைராஜ், புகழேந்தி பங்கேற்றனர்.


