உலகில் 125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா :ஸ்டாலின்
உலகில் 125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா :ஸ்டாலின்
உலகில் 125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா :ஸ்டாலின்
UPDATED : ஆக 22, 2011 12:58 AM
ADDED : ஆக 21, 2011 11:44 PM

தஞ்சாவூர்: ''சொத்துக்குவிப்பு வழக்கில்,125 முறை வாய்தா வாங்கிய புகழ் உலகில் ஜெயலலிதாவையே சேரும்,'' என்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.தஞ்சை மாவட்ட விவசாய அணி செயலாளர் கலியமூர்த்தி மகன் இளஞ்செழியன்- மோகனப்பிரியா திருமணம், தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே சானூரப்பட்டி, ஓவியா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார். விழா முடிந்து, வெளியே வந்த ஸ்டாலினை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, 'சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதை தவிர்க்க, 'வீடியோ கான்ஃபரன்ஸிங்' மூலம் நீதிமன்றத்தில் ஆஜராவதாக தெரிவித்துள்ளாரே?' எனக் கேட்டனர்.அதற்கு ஸ்டாலின், ''சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல், 125 முறை வாய்தா வாங்கிய புகழும், பெருமையும் ஜெயலலிதாவையே சேரும். உலக அளவில் ஒரு வழக்குக்கு இவர் மட்டும்தான் இத்தனை முறை வாய்தா வாங்கியுள்ளார்,'' என்றார். மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


