Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் : அரியலூர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் : அரியலூர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் : அரியலூர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் : அரியலூர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ADDED : ஆக 30, 2011 12:04 AM


Google News

அரியலூர்: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, மனைவியை வெட்டி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ படையாட்சி மகன் கொளஞ்சிநாதன்(34). இவருக்கும், தா.பழூர் அருகே அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த மணி மகள் சுமதி என்ற பெண்ணுக்கும், கடந்த எட்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கொளஞ்சிநாதன் தனது மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, சுமதியிடம் அடிக்கடி தகராறு செய்து அடித்து சித்ரவதை செய்து வந்தார். இதனால் வெறுப்படைந்த சுமதி கணவனுடன் கோபித்து கொண்டு, அனைக்குடம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று, 6 மாதம் வரை தங்கியிருந்தார்.



இதையடுத்து தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த தனது நண்பர் சுந்தரேசனுடன், அணைக்குடம் வந்த கொளஞ்சிநாதன், நடந்ததை மறந்து விட்டு குடும்பம் நடத்த தனது வீட்டுக்கு வரும்படி மனைவியை வற்புறுத்தினார். கணவனுடன் செல்வதற்கு சுமதி மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து பேசி சமாதனம் செய்வதாகக் கூறி மாமனார் வீட்டின் பின்புறம் மனைவி சுமதியை அழைத்து சென்ற கொளஞ்சிநாதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினார். உடலின் பல்வேறு இடங்களிலும் கத்தியால் வெட்டப்பட்ட சுமதி பரிதாபமாக இறந்தார்.



கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தின் போது ஏற்பட்ட மகளின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் பின்புறத்துக்கு ஓடி வந்த மாமனார் மணியையும் தாக்கிக் காயப்படுத்தினார். கடந்த 2010 ஆகஸ்ட் 22ம் தேதி நடந்த இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தா.பழூர் போலீஸார், கொளஞ்சிநாதனை கைது செய்தனர். வழக்கு விசாரணை அரியலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நேற்று விசாரித்த அரியலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளி கொளஞ்சிநாதனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us