ADDED : செப் 05, 2011 09:00 AM
திருச்சி: நிலமோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாஜி அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் (50) , மலேஷியா தப்பிச்செல்ல முயன்ற போது கொச்சி விமான நிலையத்தில் இன்று பிடிபட்டார்.
கொச்சி விமான நிலையம் வழியாக மலேஷியா செல்ல முயன்ற ராமஜெயத்தினை, திருச்சி போலீசார் கைது செய்து திருச்சிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.


