/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கொள்ளையடிக்க திட்டம் : முதுநகரில் 5 பேர் கைதுகொள்ளையடிக்க திட்டம் : முதுநகரில் 5 பேர் கைது
கொள்ளையடிக்க திட்டம் : முதுநகரில் 5 பேர் கைது
கொள்ளையடிக்க திட்டம் : முதுநகரில் 5 பேர் கைது
கொள்ளையடிக்க திட்டம் : முதுநகரில் 5 பேர் கைது
ADDED : ஜூலை 25, 2011 11:02 PM
முதுநகர் : கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பலை முதுநகர் போலீசார் கைது செய்தனர்.கடலூர் முதுநகர் பகுதியில் திருட்டு, கொள்ளை, வழிப்பழி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் கடலூர் முதுநகர் குற்றப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் போலீசார் நேற்று முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடலூர் - விருத்தாசலம் ரோடு பெரியபிள்ளையார்மேடு, காளி கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர்கள் சீத்தாங்குப்பம் கார்த்திகேயன், 22, சின்ன காரைக்காடு வெங்கடேசன், 24, சிவபாலன், 21, சுரேந்திரன், 20, ஆனந்தகுமார், 24, என்பதும், இவர்கள் அப்பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. உடன் போலீசார், ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


