/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பா.ம.க.., சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்பா.ம.க.., சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்
பா.ம.க.., சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்
பா.ம.க.., சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்
பா.ம.க.., சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்
ADDED : ஜூலை 26, 2011 12:16 AM
காரைக்கால் : காரைக்காலில் பா.ம.க., சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.காரைக்காலில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் விழா மாவட்ட பா.ம.க., சார்பில் கொண்டாடப்பட்டது.
கோட்டுச்சேரி நவகிரகா ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் தேவமணி தலைமை தாங்கி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.தொடர்ந்து திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் எதிரே பா.ம.க., பசுமை தாயகம் சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 2000 மரக்கன்றுகளை பா.ம.க., நிர்வாகிகள் மக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.