/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இரு கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து போராட்டம் நடத்த பா.ஜ., முடிவுஇரு கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
இரு கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
இரு கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
இரு கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து போராட்டம் நடத்த பா.ஜ., முடிவு
ADDED : ஜூலை 26, 2011 12:16 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள இரு கல்லூரிகளுக்கு அரசு அனுமதி பெறாவிட்டால் மாணவர்களுடன் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ., எச்சரித்துள்ளது.மாநில பா.ஜ., செய லாளர் சாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை:வில்லியனூரில் கஸ்தூரிபாய் அரசு மகளிர் கலை கல்லூரி, தவளக்குப்பத்தில் உள்ள ராஜிவ் காந்தி அரசு கலைக்கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளிலும் தேவையான கட்டட வசதி இல்லை, தகுதி வாய்ந்த பேராசிரியர் இல்லை என்பதற்காகவும் இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழக அங்கீகார இணைப்பு சான்றை அரசு ரத்து செய்துள் ளது.இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கிராமப்புற மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் பணத்தைச் செலவிட்டு படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடப்பதாகவும், இதனால் புதுச்சேரி அரசுக்கு 100 கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் மத்திய தணிக்கைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. புதுச்சேரி அரசு விரைந்து செயல்பட்டு, வரிபாக்கிகளை வசூல் செய்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவிட வேண்டும்.கல்லூரிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் மாண வர்களுடன் இணைந்து பா.ஜ., போராட்டம் நடத்தும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.