ADDED : ஜூலை 26, 2011 01:06 AM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்டவ் வெடித்ததில் இளம்பெண் பரிதாபமாக பலியானார்.
இது தொடர்பாக தூத்துக்குடி ஆர்.டி.ஓ.,விசாரணை நடத்தி வருகின்றார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சந்தனம் மனைவி முருகேஸ்வரி(27). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது வீட்டில் சமையல் செய்வதற்காக ஏர் ஸ்டவ் பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக தீ முருகேஸ்வரி உடலில் பற்றியது. படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்விசாரணையை தூத்துக்குடி ஆர்.டி.ஓ., நடத்தி வருகிறார்.


