மறையூரில் மீண்டும் சந்தன மரக்கடத்தல்
மறையூரில் மீண்டும் சந்தன மரக்கடத்தல்
மறையூரில் மீண்டும் சந்தன மரக்கடத்தல்
ADDED : ஜூலை 26, 2011 11:59 PM
மூணாறு:கேரள மாநிலம் மறையூரில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து காணப்பட்ட சந்தன மரக் கடத்தல் மீண்டும் தலை தூக்கி உள்ளது.கேரளாவில் தமிழக எல்லையோரம் உள்ள மறையூர் பகுதியில் 95 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 1600 ஏக்கரில் 55 ஆயிரத்துக்கும் அதிகாமான சந்தன மரங்கள் உள்ளன.இவை கடத்தல் காரர்களால் இவை வெட்டி கடத்தப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.சந்தன மரக் கடத்தலை தடுப்பதற்காக மறையூர் பகுதியை சிறப்பு சந்தன டிவிஷனான 2006ல் அரசு அறிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.அதன்பிறகு கடத்தல் படிப்படியாக குறைந்தது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சந்தன மரக் கடத்தல் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
நடப்பு ஆண்டில் சந்தன மரக் கடத்தல் தொடர்பாக இது வரையிலும் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் மட்டும் மறையூர் வனத்துறை அலுவலக வளாகம், அக்கரைசீமை, இஷ்டிக்குளம் போன்ற ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருந்து ஐந்து சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன.உள்வனங்களில் வனத்துறையினரின் கணக்கில் வராத மரங்களும் ஏராளமாக காணாமல் போனதாக தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் காந்தலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வண்ணான்துறை வனத்துறை அலுவலகம் அருகில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. தொடர் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும்.