/உள்ளூர் செய்திகள்/கரூர்/காய்கறி பயிரிடுவோர் சங்ககட்டிடத்தில் சமூக விரோத செயல்காய்கறி பயிரிடுவோர் சங்ககட்டிடத்தில் சமூக விரோத செயல்
காய்கறி பயிரிடுவோர் சங்ககட்டிடத்தில் சமூக விரோத செயல்
காய்கறி பயிரிடுவோர் சங்ககட்டிடத்தில் சமூக விரோத செயல்
காய்கறி பயிரிடுவோர் சங்ககட்டிடத்தில் சமூக விரோத செயல்
ADDED : ஆக 03, 2011 01:21 AM
குளித்தலை: அய்யர்மலை அருகே காய்கறி பயிரிடுவோர் கூட்டுறவு சங்க
கட்டிடத்தில் சமூ க விரோத செயல்கள் நடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த
பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.குளித்தலை அருகே அய்யர்மலை - சிவாயம்
பிரிவு சாலையில் யூனியன் பஞ்சாயத்து காய்கறி பயிரிடுவோர்கள் கூட்டுறவு
விற்பனை சங்கம் கடந்த 1985 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த
சங்கத்தின் மூலம் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அரசு
திட்டம் மூலம் பல்வேறு உதவிகள் பெற்று பய ன்பெற்று வந்தனர். இந்த நிலையில்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சங்கம் செயல்படாமல் உள்ளது. ஆனால் அலுவலக மாடி
கட்டிடம் பழுதடையாமல் பயன்படுத்தும் வகையில் உள்ளது. கட்டிடத்தில் இரவு
நேரத்தில் மது சிலர் அ ருந்துகின்றனர். மேலும் சூதாட்டம் உள்ளிட்ட சமூக
விரோத செயல்களும் நடந்து வருகிறது.
எனவே, நல்ல நிலையில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் கட்டிடத்தை மற்ற அரசு துறை அலுவலகமாக செயல்படுத்த வேண்டும்.
இல்லையேல் 'அலுவலகத்தை மாற்றி விரிவுப்படுத்த வேண்டும்' என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


