ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
விழுப்புரம் : கல்லூரிக்கு சென்ற மாணவியைக் கடத்தியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் துரை.40. இவரது மகள் சரண்யா,18. தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்தாண்டு சென்னகுணம் ஊராட்சி எழுத்தர் செல்வராஜ் என்பவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைத்தனர். கடந்த 25ம் தேதி காலை கல்லூரிக்கு சென்ற சரண்யா வீடு திரும்பவில்லை. இது பற்றி விசாரித்ததில் மாம்பழப்பட்டு சங்கர் மகன் கிருபாகரன், அவரது உறவினர்களுடன் சேர்ந்து சரண்யாவை கடத்திச் சென்றதாக தெரிய வந்தது. இது குறித்து துரை கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப் பதிந்து காணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.