/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் அன்னை தெரஸா பேரவை கிளை துவக்க விழாதர்மபுரியில் அன்னை தெரஸா பேரவை கிளை துவக்க விழா
தர்மபுரியில் அன்னை தெரஸா பேரவை கிளை துவக்க விழா
தர்மபுரியில் அன்னை தெரஸா பேரவை கிளை துவக்க விழா
தர்மபுரியில் அன்னை தெரஸா பேரவை கிளை துவக்க விழா
ADDED : செப் 16, 2011 12:26 AM
தர்மபுரி: தர்மபுரியில் அன்னை தெரஸா பேரவை கிளை துவக்க விழா நாளை (செப்.,17) மாதர் சங்க வளாக அன்பு ஆடவர் இல்லத்தில் மதியம் 3 மணிக்கு நடக்கிறது.
அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனர் கவுன்சிலர் வேணுகோபால் தலைமை வகிக்கிறார். தமிழ் சங்க தலைவர் ராஜேந்திரன், அன்னை தெரஸா பேரவை மாநில துணை தலைவர் பாடி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அன்னை தெரஸா திருவுருவப்படத்துக்கு நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா மாலை அணிவிக்கிறார். மாற்று திறனாளிக் நலச்சங்க தலைவர் யுவராஜ் வரவேற்கிறார். பேரவையை சுதந்திர போராட்ட தியாகி வடிவேல் திறந்து வைக்கிறார். பேரவை நிறுவனர் தாஸ், மாவட்ட மறு வாழ்வு அலுவலர் இம்தியாஸ் அஹமத், உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம், தொழில் அதிபர் குமரன், திண்டுக்கல் தர்மாம்பாள் அறக்கட்டளை நிறுவனர் திருவோடு சுவாமிகள், அன்னை கஸ்தூரிபா சேவா சங்க பொது செயலாளர் சுதாகர் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். சந்திரா ஆதிமூலம், நஞ்சுண்டன், கந்தசாமி, அர்சுணன், ரவி, பாக்கியராஜ், பெருமாள், கணேசன், பரமேஸ்வரன், கூத்தரசன், கண்ணன், ஜெயராம் சுந்தரம், முரளி, செல்வமணி, இன்பசேகரன், ரமாதேவி தயாநிதி, சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ராஜபாலாஜி நன்றி கூறுகிறார்.


