/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்
விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்
விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்
விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 700 போலீசார்
ADDED : செப் 03, 2011 01:44 AM
கடலூர் : மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை முன்னிட்டு 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 573 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டது.
3ம் நாளான இன்று (3ம் தேதி) விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் கடலில் கரைக்கப்படுகிறது. சிலைகள் டிராக்டர், மினிடெம்போ உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடலூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் தேவனாம்பட்டினம் கடலில் கரைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 6 போலீசார் கொண்ட ஒரு குழுவினர் படகில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். போலீசாருடன் இணைந்து மீனவர்களும் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


