/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் நேர்காணல்வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் நேர்காணல்
வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் நேர்காணல்
வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் நேர்காணல்
வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் நேர்காணல்
ADDED : ஆக 30, 2011 11:30 PM
புதுச்சேரி : புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வரும் மாதம் 12ம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறை தீர்க்கும் நேர்காணல் நடக்கிறது.
புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி அலுவலக உதவி ஆணையர் (புதுச்சேரி துணை மண்டலம்) ராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி நூறடி சாலை உழந்தைகீரப்பாளையம் எண்.101ல் அமைந்துள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உதவி ஆணையர் தலைமையில் வரும் மாதம் 12ம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறை தீர்க்கும் நேர்காணல் நடக்கிறது. நேர்காணலில் பங்குபெற விரும்புவோர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் விண்ணப்பத்தைப் பெற்று வருங்கால வைப்பு நிதி பற்றிய தங்களின் குறைகளை வரும் 7ம் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


