/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி
ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி
ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி
ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி
ADDED : செப் 03, 2011 10:08 PM
தேனி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கலெக்டர் பழனிசாமி கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடரை சேர்ந்த ஆண், பெண் இருபாலருக்கும், ஐ.ஆர்.டி.,நிறுவனம் மூலம் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.2011 ஆக., 8ல், 20 வயதிற்கு மேலும், 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 159.5 செ.மீ.,உயரம்,குறைந்த பட்சம் 50 கிலோ எடை இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். பி.எஸ். வி.,பேட்ச் பதிந்திருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் தேனி கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண் 73ல், உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். அவற்றை பூர்த்தி செய்துசெப்., 9க்குள் கொடுக்க வேண்டும், என்றார்.


