விமான விபத்து மழையால் மீட்பு பணி பாதிப்பு
விமான விபத்து மழையால் மீட்பு பணி பாதிப்பு
விமான விபத்து மழையால் மீட்பு பணி பாதிப்பு
ADDED : செப் 03, 2011 10:46 PM
மும்பை: மும்பை விமான நிலைய ஓடுபாதையை விட்டு இறங்கி, துருக்கி விமானம் விபத்துக்குள்ளானது.
பலத்த மழை காரணமாக, இரண்டாவது நாளான நேற்றும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டதால், விமானத்தை மீட்க முடியவில்லை. இதனால், சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டே கிடக்கிறது.சகதியில் சிக்கிய விமானத்தை மீட்க அதிகாரிகளும், ஊழியர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், அங்கு தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானத்தை மீண்டும் ஓடுபாதைக்கு இழுத்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.விபத்து காரணமாக, விமானங்கள் வருவதும், புறப்படுவதும் பாதிக்கப்பட்டது. விமானத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.


