Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மற்றொரு நில அபகரிப்பு கலெக்டர், கமிஷனருமதுரையில் ஆசிரியர் தினவிழா

மற்றொரு நில அபகரிப்பு கலெக்டர், கமிஷனருமதுரையில் ஆசிரியர் தினவிழா

மற்றொரு நில அபகரிப்பு கலெக்டர், கமிஷனருமதுரையில் ஆசிரியர் தினவிழா

மற்றொரு நில அபகரிப்பு கலெக்டர், கமிஷனருமதுரையில் ஆசிரியர் தினவிழா

ADDED : செப் 06, 2011 01:32 AM


Google News

மதுரை : மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா பசுமை விழாவாக கொண்டாடப்பட்டது.

இதில் 'ஒன்னெஸ் டிரஸ்ட்' சார்பில் பூமி வெப்பமயமாதலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியில் ஒருங்கிணைப்பாளர்களான ஆனந்த், விக்னேஷ்குமார் ஆகியோர் பள்ளிக்கு 300 மரக்கன்றுகம் வழங்கினர். மழலையர் பிரிவு மாணவர்கள் பல்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சாரண, சாரணியர் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. அவனியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.மாணவர் பாலமுருகன் வரவேற்றார். மாணவர் மலைச்சாமி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் பற்றிய சிந்தனைகள் என்ற தலைப்பில் மாணவி கே.பூர்ணிமா பேசினார். மாணவர் சந்தனராஜ் நன்றி கூறினார். ஆசிரியைகள் ஜூலிகவிதா, செல்வி, சத்யா, ராஜேஸ்வரி, லலிதா ஏற்பாடுகளை செய்திருந்தனர். மதுரையின் பல பள்ளிகளில் ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஆசி பெற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us