/உள்ளூர் செய்திகள்/திருச்சி/சாவிலும் பிரியாத தம்பதியர் துறையூர் அருகே சோகம்சாவிலும் பிரியாத தம்பதியர் துறையூர் அருகே சோகம்
சாவிலும் பிரியாத தம்பதியர் துறையூர் அருகே சோகம்
சாவிலும் பிரியாத தம்பதியர் துறையூர் அருகே சோகம்
சாவிலும் பிரியாத தம்பதியர் துறையூர் அருகே சோகம்
ADDED : அக் 08, 2011 11:47 PM
துறையூர்: துறையூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல், நோய்வாய்பட்ட கணவனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் துறையூர், தியாகி சங்கரலிங்கரானார் தெருவை சேர்ந்த பெருமாள் (80).
இவரது மனைவி லட்சுமி (70). இவர்களுக்கு கோபால் என்ற மகனும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் தற்போது, துறையூர் அருகே உள்ள சமத்துவபுரத்தில் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெருமாளை பக்கவாதம் தாக்கி, வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.கணவனைக் கவனித்து வந்த லட்சுமி, கடந்த ஆண்டில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார். பெற்றோர் இருவரையும் மகனும், மகளும் கவனித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு லட்சுமி இறந்தார். 3 மணி நேரத்திலேயே மனைவி இறந்த துயரத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதபடி பெருமாள் சோகத்துடன் காணப்பட்டார்.நள்ளிரவு 2 மணியளவில் சிறுநீர் கழிக்க படுக்கையிலிருந்து எழுந்தார். துக்க வீட்டிலிருந்த உறவினர்கள் அவரை அமர வைத்தனர். அமர்ந்த நிலையிலேயே பெருமாள் இறந்தார்.ஒரே நாளில் கணவன், மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவிலும் இணைபிரியாத தம்பதியருக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.


