/உள்ளூர் செய்திகள்/கரூர்/மொபைல்ஃபோனில் பேசியபடி "டிரைவிங்': அச்சத்தில் பயணிகள்மொபைல்ஃபோனில் பேசியபடி "டிரைவிங்': அச்சத்தில் பயணிகள்
மொபைல்ஃபோனில் பேசியபடி "டிரைவிங்': அச்சத்தில் பயணிகள்
மொபைல்ஃபோனில் பேசியபடி "டிரைவிங்': அச்சத்தில் பயணிகள்
மொபைல்ஃபோனில் பேசியபடி "டிரைவிங்': அச்சத்தில் பயணிகள்
ADDED : செப் 03, 2011 11:57 PM
குளித்தலை: குளித்தலை பகுதியில் மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டு டிரைவர்கள் பஸ்களை இயக்குவதால் பயணிகள் திகில் பயணம் மேற்கொள்கின்றனர்.
குளித்தலை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், மணல் மற்றும் ஜல்லி லாரிகள், கனரக வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகிறது. பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் வாகனத்தை அதிக வேகத்தில் செல்லும்போது கூட மொபைல் ஃ போனில் பேசிக்கொண்டு தான் சென்று வருகின்றனர். இதனால் சில நேரங்களில் சிறு விபத்துகள் முதல் கோர விபத்துகள் வ ரை தொடர்கதையாகி வருகிறது.
பயணிகளை பத்திரமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும் பஸ் டிரைவர்கள், பணி நேரத்தில் மொபைல் ஃபோன் பயன்படுத்த தடை இருந்தும் பெரும்பாலான டிரைவர்கள் கடைபிடிப்பதில்லை. இதுமட்டுமின்றி டிரைவர்கள் மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவதை போலீஸார் பார்த்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே, பஸ் மற்றும் லாரி டிரைவர்கள் பணி நேரத்தின் போது மொபைல் ஃபோனை பேச அனுமதிக்க கூடாது. மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


