/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/காரிமங்கலம் பி.டி.ஓ., ஆஃபீஸில் வேட்பு மனு தாக்கலுக்கு கூட்டம்காரிமங்கலம் பி.டி.ஓ., ஆஃபீஸில் வேட்பு மனு தாக்கலுக்கு கூட்டம்
காரிமங்கலம் பி.டி.ஓ., ஆஃபீஸில் வேட்பு மனு தாக்கலுக்கு கூட்டம்
காரிமங்கலம் பி.டி.ஓ., ஆஃபீஸில் வேட்பு மனு தாக்கலுக்கு கூட்டம்
காரிமங்கலம் பி.டி.ஓ., ஆஃபீஸில் வேட்பு மனு தாக்கலுக்கு கூட்டம்
ADDED : செப் 27, 2011 11:40 PM
காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியனில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர்
வேட்புமனு கொடுக்க ஏராளமானோர் திரண்டதால், கிருஷ்ணகிரி ரோட்டில்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காரிமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட 30
பஞ்சாயத்துகளுக்கு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள்,
வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு காரிமங்கலம் யூனியன் அலுவலகத்தில்
வேட்புமனு பெறப்படுகிறது. நேற்று முன்தினம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு
அதிகமானோர் மனு அளித்தனர். இதேபோல் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்,
வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிட மனு அளித்தனர். நேற்று மஹாளய
அமாவாசையையொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் கூட்டம்
அதிகமாக காணப்பட்டது. அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., -
காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன்
வாகனங்களில் வந்து வேட்புமனு அளித்தனர். இதனால், ராமசாமி கோவில்
பகுதியிலிருந்து யூனியன் அலுவலகம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இன்று நல்ல நாளாக இல்லாததால் வேட்புமனு தாக்கல் அதிகம் இருக்காது என
கூறப்படுகிறது. கடைசி நாளான நாளை 29ம் தேதி வளர்பிறை நாளாக உள்ளதால்
அனைவரும் தங்களது வேட்புமனுவை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கடைசி
நாளில் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ்
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. *
காவேரிப்பட்டணம் யூனியனில் உள்ள 36 பஞ்சாயத்துகளில் தலைவர், கவுன்சிலர்,
வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட
விருப்பம் கடந்த 2 நாட்களாக அதிகளவில் மனு அளித்து வருகின்றனர். நேற்று
அமாவாசையை முன்னிட்டு ஒரே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில்
போட்டியிடுபவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் குவிந்ததால் கிருஷ்ணகிரி ரோட்டில்
போக்கவரத்து பாதிக்கப்பட்டது.


