/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டுஅரியலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு
அரியலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு
அரியலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு
அரியலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருட்டு
ADDED : செப் 07, 2011 01:46 AM
அரியலூர்: அரியலூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடப்பட்ட சம்பவம் நடந்ததுள்ளது.
அரியலூரை சேர்ந்த ராஜூ செட்டியார் மகன் கிருஷ்ணமூர்த்தி. மளிகை வியாபாரியான கிருஷ்ணமூர்த்திக்கு அரசினர் தொழிற் பயிற்சி நிலைய விடுதிக்கு பின்புறம் வீடு உள்ளது. ஓட்டக்கோயில் கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றும் அவரது மனைவி நேற்றுமுன்தினம் காலை வேலைக்கு சென்ற நிலையில், தனது வீட்டை பூட்டி விட்டு கடைவீதியில் உள்ள தனது மளிகை கடைக்கு சென்õர். அதன்பின், மாலை வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, வீட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த வளையல், மோதிரம், தங்ககாசு உள்பட ஆறு பவுன் மதிப்புள்ள தங்க நகை திருட்டு போயுள்ளது தெரியவந்தது. கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


