/உள்ளூர் செய்திகள்/சேலம்/வேகத்தடை போல்டு அகற்றம்நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைவேகத்தடை போல்டு அகற்றம்நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
வேகத்தடை போல்டு அகற்றம்நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
வேகத்தடை போல்டு அகற்றம்நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
வேகத்தடை போல்டு அகற்றம்நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : ஆக 25, 2011 02:04 AM
இடைப்பாடி:வேகத்தடை ரப்பர் கட்டைகள் உடைந்து, வாகனங்களின் டயர்களை பதம் பார்த்த போல்டுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றியுள்ளனர்.
தமிழகத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான ரோடுகளில் பள்ளிகள், வழிபாட்டு
தலங்கள் மற்றும் குறுகிய பாலம் உள்ள இடங்களில் வேகத்தடை அமைக்கப்படும்.
சமீப காலமாக, நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் ரப்பர் கட்டைகளால் ஆன வேகத்தடைகள்
அமைக்கப்படுகிறது. ரப்பர் கட்டைளுடன் போல்ட்டுகள் போடப்பட்டுள்ளது. பல
இடங்களில் பொருத்தப்பட்ட ரப்பர் கட்டைகள் விரைவிலேயே உடைந்து விடுகிறது.
ரப்பர்கட்டைகள் உடைந்து போவதால், போல்ட்டுகள் மட்டும் வெளியே
நீட்டிக்கொண்டிருக்கின்றன. இவை அந்த வழியாக வாகனங்களின் டயர்களை பதம்
பார்த்து விடுகிறது. இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகும் நிலையும்
இருந்தது.
இடைப்பாடியில் இருந்து சேலம் செல்லும் மெயின்ரோட்டில், கன்னந்தேரியில்
அமைக்கப்பட்ட வேகத்தடையில் ரப்பர் கட்டைகள் உடைந்து ஆறு மாதங்களுக்கும்
மேலாக போல்ட்டுகள் நீட்டிக்கொண்டிருந்தன. இதுபற்றி 'காலைக்கதிர்' நாளிதழ்
செய்தி வெளியிட்டது.இந்த செய்தி எதிரொலியாக, கன்னந்தேரி பகுதியில் இருந்த
போல்டுகள் உடனடியாக அகற்றப்பட்டது.


