/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உடனடி தேர்வு இன்று துவக்கம்பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உடனடி தேர்வு இன்று துவக்கம்
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உடனடி தேர்வு இன்று துவக்கம்
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உடனடி தேர்வு இன்று துவக்கம்
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உடனடி தேர்வு இன்று துவக்கம்
ADDED : ஜூலை 28, 2011 10:41 PM
புதுச்சேரி : பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பருவத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகளுக்கு உட னடித் தேர்வு இன்று (29ம் தேதி) காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடக்கிறது.
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 2011ம் ஆண்டு மே மாதம் மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த பட்டப்படிப்பிற்குரிய பருவத் தேர்வில் தோல்வி பெற்ற மாணவிகளுக்கு உரிய உடனடித் தேர்வு இன்று (29ம் தேதி) காலை 9.30 மணி முதல் 12.30 வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் என இருவேளையும் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவிகள் அனைவரும் கல்லூரி அலுவலகத்தில் தங்களுக்குரிய நுழைவுச் சீட்டு மற்றும் தேர்வு அட்டவணையைப் பெற்றுக் கொண்டு தவறாமல் தேர்வு எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


