/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருத்தணி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏழு பேர் போட்டிதிருத்தணி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏழு பேர் போட்டி
திருத்தணி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏழு பேர் போட்டி
திருத்தணி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏழு பேர் போட்டி
திருத்தணி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏழு பேர் போட்டி
ADDED : அக் 07, 2011 01:10 AM
திருத்தணி : திருத்தணி நகராட்சி தலைவர் பதவி மற்றும், 21 வார்டு கவுன்சிலர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதில் ஏழு பேர் தலைவர் பதவிக்கும், 93 பேர் வார்டு கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். நகராட்சித் தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., சார்பில் நகரச் செயலர் சவுந்திரராஜன், தி.மு.க. சார்பில் நகரச் செயலர் சந்திரன், தே.மு.தி.க., சார்பில், மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் சுபாஷ், பா.ம.க., சார்பில் நகரச் செயலர் மணி, பா.ஜ., சார்பில் அனந்தசயனம், சுயேச்சையாக பெருமாள் ஆகிய, 7 பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இவர்கள், 21 வார்டுகளுக்கும் சென்று, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும், 93 வேட்பாளர்களும் வீடு வீடாகச் சென்று, பிரசாரம் செய்து வருகின்றனர்.


