/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உப்பு தண்ணீருக்கு தனி ஆழ்துளை கிணறுஉப்பு தண்ணீருக்கு தனி ஆழ்துளை கிணறு
உப்பு தண்ணீருக்கு தனி ஆழ்துளை கிணறு
உப்பு தண்ணீருக்கு தனி ஆழ்துளை கிணறு
உப்பு தண்ணீருக்கு தனி ஆழ்துளை கிணறு
ADDED : அக் 07, 2011 10:33 PM
சிவகாசி : ''சிவகாசி பராசக்தி காலனியில் உப்பு தண்ணீருக்காக, தனி ஆழ்துளை கிணறு அமைத்து, தெருக்கள் தோறும் தண்ணீர் தொட்டி வசதி செய்வேன்,'' என, சுயேட்சை வேட்பாளர் ஞானசேகரன் தெரிவித்தார்.சிவகாசி நகராட்சியில் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக சட்டை சின்னத்தில் போட்டியிடும் ஞானசேகரன், ஒன்று முதல் ஆறு வார்டுகளில், ஆதரவாளர்களுடன் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கந்தபுரம் காலனியில் வாறுகால் , ரோடு, உப்பு தண்ணீருக்காக சிறிய தொட்டி, தனி ரேஷன் கடை அமைத்து தருவேன். அண்ணா காலனி , ராணி அண்ணா காலனி மக்கள் பயன்பெறும் வகையில், 2004ல் தலைவராக இருந்த போது, குடியிருப்பு பகுதிகளை 'அசைன்மென்ட் பட்டா' வாக மாற்ற, நிலத்தின் வகைப்பாடு மாற்ற ஏற்பாடு செய்தேன். வெற்றி பெற்றால், பட்டா கிடைக்க தீர்மானம் நிறைவேற்றுவேன். சிவன்கோயில் நந்தவன தெரு, முஸ்லிம் தெரு சுகாதாரம் மோசமாக உள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்கும் குடிநீரை தினம் வழங்க நடவடிக்கை எடுப்பேன். 4,5 ,6வது வார்டுகளில் சுகாதார கேடுகளை சீரமைக்க, தனியார் ஒத்துழைப்புடன் சுகாதாரம் மேம்பட நடவடிக்கை எடுப்பேன். பராசக்தி காலனியில் உப்பு தண்ணீருக்காக , சிறுகுளம் கண்மாயில் ஆழ்துளை குழாய் அமைத்து, தெருக்கள் தோறும் குழாய் வசதி செய்து தருவேன். சிறுகுளத்தை கழிவறையாக பயன்படுத்தும் நிலையை மாற்ற ,5000 லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்ட 'மொபைல் டாய்லட்' வாகனம் இரு இடங்களில் நிறுத்தப்படும். 'மொபைல் டாய்லட்' நிரம்பியவுடன் அதனை டிரைலர் மூலம் அப்புறப்படுத்தும் வகையில், வாகனம் தயார் செய்து, முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.


