ADDED : ஆக 26, 2011 12:15 AM
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே வீடு புகுந்து 8 சவரன் நகைகள் திருடு போனது.
விழுப்புரம் தாலுகா கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் மாதா கோவில் அருகே வசிப்பவர் தேவநேசன்,60. இவர் குடும்பத்தினருடன் கடந்த 23ம் தேதி இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த இரும்புபெட்டியை உடைத்து 8 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


