Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/துணை வட்டார வளர்ச்சி அலுவலர்பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு

ADDED : செப் 08, 2011 02:30 AM


Google News
கெங்கவல்லி: உள்ளாட்சி தேர்தலையொட்டி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 22 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு மாநில தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதையொட்டி, யூனியனுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த அலுவலர்கள், அதே யூனியனில் அலுவலராக பணிபுரிந்து வருபவர்களை இடமாற்றம் செய்யும்படி, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 யூனியன் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 22 பேரை, நிர்வாக நலன் கருதி பணி மாறுதல் செய்து, மாவட்ட கலெக்டர் மகரபூசணம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பெத்தநாயக்கன்பாளையம் யூனியனில் பணிபுரிந்து வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சவுந்தரராஜன், தலைவாசல் யூனியனுக்கும், தலைவாசல் யூனியன் பரமசிவம், பெத்தநாயக்கன்பாளையம் யூனியனுக்கும், ஆத்தூர் யூனியன் தாமரைச்செல்வி, பெத்தநாயக்கன்பாளையம் யூனியனுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெத்தநாயக்கன்பாளையம் யூனியன் முருகேசன், ஆத்தூர் யூனியனுக்கும், தலைவாசல் யூனியன் பேபி, ஆத்தூர் யூனியனுக்கும், ஆத்தூர் யூனியன் வெங்கடேஷன், தலைவாசல் யூனியனுக்கும், வாழப்பாடி யூனியன் செந்தில், பெத்தநாயக்கன்பாளையம் யூனியனுக்கும், பெத்தநாயக்கன்பாளையம் யூனியன் கந்தசாமி, வாழப்பாடி யூனியனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.கொளத்தூர் யூனியன் கருணாநிதி, மேச்சேரி யூனியனுக்கும், மேச்சேரி யூனியன் நடராஜன், நங்கவள்ளி யூனியனுக்கும், நங்கவள்ளி யூனியன் கவுரி, தாரமங்கலம் யூனியனுக்கும், தாரமங்கலம் யூனியன் இளங்கோவன், நங்கவள்ளி யூனியனுக்கும், நங்கவள்ளி யூனியன் அர்ச்சுனன், கொளத்தூர் யூனியனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.நங்கவள்ளி யூனியன் ரவிச்சந்திரன், மேச்சேரி யூனியனுக்கும், மேச்சேரி யூனியன் மனோகரன், நங்கவள்ளி யூனியனுக்கும், மகுடஞ்சாவடி யூனியன் வைரவேல், கொங்கணாபுரம் யூனியனுக்கும், கொங்கணாபுரம் யூனியன் செந்தில்முருகன், மகுடஞ்சாவடி யூனியனுக்கும், சேலம் யூனியன் முத்து, வாழப்பாடி யூனியனுக்கும், வாழப்பாடி யூனியன் மாதையன், நங்கவள்ளி யூனியனுக்கும், நங்கவள்ளி யூனியன் சகாயஎமல்டாராணி, சேலம் யூனியனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.நங்கவள்ளி யூனியன் கோவிந்தராஜ் , அதே யூனியனில் நிர்வாகம் பொறுப்புக்கும், நங்கவள்ளி யூனியன் சென்னகிருஷ்ணன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி உதவி திட்ட அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us