/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தியபிறகே கலந்தாய்வு: அப்துல் மஜீத் வலியுறுத்தல்தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தியபிறகே கலந்தாய்வு: அப்துல் மஜீத் வலியுறுத்தல்
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தியபிறகே கலந்தாய்வு: அப்துல் மஜீத் வலியுறுத்தல்
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தியபிறகே கலந்தாய்வு: அப்துல் மஜீத் வலியுறுத்தல்
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தியபிறகே கலந்தாய்வு: அப்துல் மஜீத் வலியுறுத்தல்
ADDED : செப் 16, 2011 03:18 AM
கடலூர்:தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்திய பிறகே கலந்தாய்வு நடத்த
வேண்டும் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர்
வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
பொதுச் செயலர் அப்துல்மஜீத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஆரம்பப்
பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலைமை
ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வு பெறவேண்டிய
ஆசிரியர்கள், பதவி உயர்வு வாய்ப்பை இழக்கின்றனர். ஆசிரியர்களுக்கு பதவி
உயர்வு அளித்தால், காலியாக உள்ள இடங்களுக்கு காத்திருப்பவர்களுக்கு வேலை
வாய்ப்பு ஏற்படும். எனவே தரம் உயர்த்தப்பட்ட 15,200 நடுநிலைப்
பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் ஒதுக்க வேண்டும்.நடுநிலைப் பள்ளிகளை
உயர்நிலையாக தரம் உயர்த்தினால், நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்
பதவி இழக்கும் நிலை ஏற்பட்டு, வாங்கும் சம்பளமும் குறைவு ஏற்படும். எனவே
இவற்றை போக்க தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்திட
வேண்டும்.ஆசிரியர் மாணவர், விகிதம் மாற்றப்பட்டு, அரசு உத்தரவு
வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் மாணவர் சதவீதம் மாற்றப்படுவதினால் ஏற்படும்
காலிபணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தரம் உயர்தப்பட்ட
நடுநிலைப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் தலைமை ஆசிரியர்
பணியிடங்களை ஏற்படுத்தப்பட்ட பின்னரே கலந்தாய்வு, பதவி உயர்வு நடைமுறைகளை
ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.


