Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தொகுப்பூதியத்தில் 50 சதவீத பணிக் காலம்பென்ஷன் கணக்கில் எடுத்து கொள்ள உத்தரவு

தொகுப்பூதியத்தில் 50 சதவீத பணிக் காலம்பென்ஷன் கணக்கில் எடுத்து கொள்ள உத்தரவு

தொகுப்பூதியத்தில் 50 சதவீத பணிக் காலம்பென்ஷன் கணக்கில் எடுத்து கொள்ள உத்தரவு

தொகுப்பூதியத்தில் 50 சதவீத பணிக் காலம்பென்ஷன் கணக்கில் எடுத்து கொள்ள உத்தரவு

ADDED : ஜூலை 23, 2011 02:36 AM


Google News
திருநெல்வேலி:தொகுப்பூதியத்தில் 50 சதவீத பணிக் காலத்தை பென்ஷன் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் பஞ்., பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் வரையறுக்கப்படாத பணி, தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிந்து 1.4.2003க்கு முன்னர் நிரந்தர பணியில் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் பொருந்தும் வகையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி இவர்களை நிரந்தரமாக பணியில் ஈர்க்கப்படுவதற்கு முன் 1.1.1961க்கு பின் பணிபுரிந்த வரையறுக்கப்படாத பணிக் காலம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையிலான மொத்த பணிக் காலத்தில் பாதியை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்களின் ஓய்வூதியத்திற்கு தகுதியான பணிக் காலத்துடன் சேர்த்து ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்து கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.ஊராட்சி உதவியாளர் பணியிடத்தில் நிலை - 1, நிலை - 2, என இரு நிலைகளில் எந்த நிலையில் பணிபுரிந்திருந்தாலும், முழு நேர ஊராட்சி எழுத்தராகவோ அல்லது பகுதி நேர எழுத்தராகவோ பணிபுரிந்திருப்பினும் அவர்கள் 1.4.2003க்கு முன்னர் இளநிலை உதவியாளர் நிலையில் அரசு பணியில் ஈர்க்கப்பட்டிருப்பின் அவர்களை தொகுதிப்பூதிய பணிக் காலத்தில் 50 சதவீத பணிக் காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்து கொண்டு ஓய்வூதிய பலன்களை பெற்று வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அரசை கேட்டு கொண்டார்.இதனை அரசு நன்கு பரிசீலனை செய்தது.

ஊராட்சி உதவியாளர் பணியிடத்தில் நிலை - 1, நிலை - 2 என இரு நிலைகளில் எந்த நிலையில் பணிபுரிந்திருந்தாலும் மேலும் முழு நேர ஊராட்சி எழுத்தராகவோ அலலது பகுதி நேர ஊராட்சி எழுத்தராகவோ பணிபுரிந்திருந்தாலும் அவர்கள் 1.4.2003க்கு முன்னர் இளநிலை உதவியாளர் அரசு பணியில் ஈர்க்கப்பட்டிருப்பின் அவர்களது தொகுப்பூதிய பணிக் காலத்தை அரசு பணிக் காலத்துடன் சேர்த்து ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்து கொள்ளலாம்.இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us