Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காங்., நிர்வாகிகள் கூட்டம்

காங்., நிர்வாகிகள் கூட்டம்

காங்., நிர்வாகிகள் கூட்டம்

காங்., நிர்வாகிகள் கூட்டம்

ADDED : செப் 08, 2011 10:07 PM


Google News
பல்லடம் : காங்., செயல்வீரர்கள் கூட்டம், பல்லடத்தில் நடந்தது.

வட்டார தலைவர் ரவி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கோவை புறநகர் மாவட்ட தலைவர் மனோகரன் வரவேற்றார்.கூட்டத்தில், 'அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்; போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பல்லடம் - மங்கலம் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகள் கொண்ட, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பல்லடம் வட்டாரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும்; பல்லடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்,' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஈரோடு மாவட்ட தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார பொது செயலாளர் ரத்தினசாமி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us