ADDED : ஆக 22, 2011 10:14 AM
புதுடில்லி: வலிமையான லோக்பால் மசோதா கோரி காந்தியவாதி அன்னா ஹசாரே இருந்து வரும் உண்ணாவிரதம் 7வது நாளை எட்டியுள்ளது.
சுமார் 150 மணிநேரத்தை தாண்டியுள்ள உண்ணாவிரதம் காரணமாக ஹசாரேவின் உடல் எடை 5 கிலோ குறைந்துள்ளது. அவரது ரத்தம் மற்றும் சிறுநீரில் கீடோன் என்ற வேதிப்பொருள் காணப்படுவதாகவும், இது கிட்னி மற்றும் கல்லீரலை பாதிக்கும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.