Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பாலங்கள் கட்டுமான பணிஅமைச்சர்கள் ஆய்வு

பாலங்கள் கட்டுமான பணிஅமைச்சர்கள் ஆய்வு

பாலங்கள் கட்டுமான பணிஅமைச்சர்கள் ஆய்வு

பாலங்கள் கட்டுமான பணிஅமைச்சர்கள் ஆய்வு

ADDED : ஆக 20, 2011 11:49 PM


Google News
திருப்பூர்:திருப்பூர் பகுதியில் நடந்து வரும் பாலம் கட்டுமானப் பணிகளை, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.நெடுஞ்சாலைத் துறை சார்பில், திருப்பூர், மண்ணரையில் காங்கயம் சாலை மற்றும் ஊத்துக்குளி சாலையை இணைக்கும் வகையில், நொய்யல் ஆற்றின் மீது 4.30 கோடி மதிப்பில், நான்கு வழி பாதையுடன் பாலம் கட்டப்படுகிறது; திட்டச் சாலைகள் திட்டத்தில், 17 கோடி மதிப்பில், வஞ்சிபாளையம் ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்டப் பாலம், 11.40 கோடியில், கூலிபாளையம்-வாவிபாளையம் இடையே ரயில்வே மேம்பாலம், நெடுஞ்சாலைத் துறை சார்பில், திருப்பூர் - விஜயமங்கலம் இடையே நல்லாற்றின் மீது 1.80 கோடியிலும், நபார்டு வங்கி திட்டத்தில் ஊத்துக்குளி ஆர்.எஸ்., திருப்பூர் சிப்காட் இடையே நொய்யலாற்றின் மீது 2.95 கோடியிலும் உயர்மட்டப் பாலம் என, நான்கு பாலங்கள் 37.45 கோடி மதிப்பில் நடந்து வருகின்றன.பணிகளை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் பழனிசாமி, தொழிற்துறை அமைச்சர் சண்முகவேலு, நேற்று ஆய்வு செய்தனர்.

கலெக்டர் மதிவாணன், எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், பரமசிவம், தங்கவேலு, நடராஜன், பொன்னுசாமி மற்றும் கருப்பசாமி, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பெரியசாமி, மண்டலப் பொறியாளர் பழனிசாமி, பணிகளின் நிலை குறித்து விளக்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us