ADDED : ஜூலை 24, 2011 01:06 AM
சேலம்: சேலத்தில் துவங்கியுள்ள புத்தக கண்காட்சி, ஜூலை 31ல் நிறைவடைகிறது.
சேலம் தெய்வீக திருமண மண்டபத்தில், கடந்த 22ம் தேதி புத்தக கண்காட்சி துவங்கப்பட்டது. கண்காட்சியில், பல்வேறு பதிப்பகத்தின் சார்பில், 50 ஸ்டால்கள் அமைத்து புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மிகம், மருத்துவம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு துறை தொடர்பான ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. தவிர, சி.டி.,க்களும் உள்ளன.
புத்தகங்களுக்கு, 10 முதல், 30 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. பழைய புத்தகங்களுக்கு, 50 சதவீதம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடக்கிறது. இன்று முதல், கண்காட்சியை பார்வையிட வரும் வாசர்கள் இலவசமாக ரத்தவகை கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி கண்காட்சி நிறைவடைகிறது.


