/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொழிற்கல்வி பதிவு செய்ய ஏற்பாடு :இணைய தளத்தில் பதியவும் வசதிதொழிற்கல்வி பதிவு செய்ய ஏற்பாடு :இணைய தளத்தில் பதியவும் வசதி
தொழிற்கல்வி பதிவு செய்ய ஏற்பாடு :இணைய தளத்தில் பதியவும் வசதி
தொழிற்கல்வி பதிவு செய்ய ஏற்பாடு :இணைய தளத்தில் பதியவும் வசதி
தொழிற்கல்வி பதிவு செய்ய ஏற்பாடு :இணைய தளத்தில் பதியவும் வசதி
ADDED : ஜூலை 28, 2011 09:10 PM
திருப்பூர் : முதுநிலை பட்டங்கள் மற்றும் தொழிற்கல்வி படிப்பு
முடித்தவர்கள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது இணைய தளத்தில்
நேரடியாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலர் ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கை:முதுநிலை பட்டப்படிப்பு மற்றும்
பி.இ., - பி.டெக்., - எம்.பி.பி.எஸ்., - சி.ஏ.,- பி.எல்., போன்ற
தொழிற்கல்வி படிப்புகளை, தங்கள் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்யவும், பதிவை புதுப்பிக்கவும், கூடுதல் விவரங்களை பதிவு செய்யவும்,
மாற்றம் செய்யவும், சென்னை அல்லது மதுரையில் உள்ள வேலைவாய்ப்பு
அலுவலகங்களுக்கு சென்று வர வேண்டியிருந்தது.இதனால் ஏற்படும் சிரமத்தை
தவிர்க்கவும், விண்ணப்பதாரரின் வசதிக்காகவும் மாநில அரசு புதிய முறையை
அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்பதிவு பணிகளை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்திலேயே பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பதிவு
செய்வோருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், இணைய தளத்தில்
நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
டttணீ://tணதிஞுடூச்டிதிச்ச்டிணீத.ஞ்ணிதி.டிண/ஞுட்ணீணிதீஞுணூ என்ற
முகவரியில் விண்ணப்பதாரர் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.இணைய தளத்தில்
நேரடியாக பதிவு செய்யும் புதிய விண்ணப்பதாரர்கள் ணஞுதீ தண்ஞுணூ டிஞீ பதிவு
செய்து திரையில் வரும் கட்டங்களில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய
வேண்டும். அதன் பின் தொடர்ச்சியாக தங்கள் பதிவு விவரங்களையும் பதிந்து,
பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பெறலாம். பதிவெண் வழங்கப்படும் வரை
தண்ஞுணூ டிஞீயை பயன்படுத்தலாம்.பழைய பதிவுதாரர்கள் தங்களின் தண்ஞுணூ டிஞீ
ஆக தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பாஸ் வேர்டாக கொண்டு,
புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தகுதி பதிவு முகவரி மாற்றம் போன்றவற்றை
செய்து கொள்ளலாம், என்று கூறியுள்ளார்.


