லோக்பால் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
லோக்பால் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
லோக்பால் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
UPDATED : ஜூலை 28, 2011 02:15 PM
ADDED : ஜூலை 28, 2011 01:38 PM
புதுடில்லி : ஊழலுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள லோக்பால் வரைவுக்குழு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் இந்த மசோதா வரம்பிற்குள் பிரதமர் மற்றும் நீதிபதிகள் கொண்டுவரப்படவில்லை. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு அமைச்சர்கள் அம்பிகா சோனி, சல்மான் குர்ஷித் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது லோக்பால் மசோதாவில் சில மாற்றங்கள் செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த குழுவுக்கு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட் நீதிபதி ஒருவர் தலைவராக இருப்பார். அவருக்கு கீழ் 8 பேர் கொண்ட உறுப்பினர்கள் இருப்பர், இந்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருப்பர். ஊழல் குறித்து 7 ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளித்தால் அந்த புகாரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நடப்பு பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தனர். மசோதாவிற்குள் பிரதமர், நீதிபதிகள் சேர்க்கப்படாததால், அன்னா ஹசாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


