Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொலை வழக்கில் தேடப்பட்டவர்பழநியில் துப்பாக்கியுடன் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர்பழநியில் துப்பாக்கியுடன் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர்பழநியில் துப்பாக்கியுடன் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர்பழநியில் துப்பாக்கியுடன் கைது

ADDED : செப் 04, 2011 09:46 PM


Google News
பழநி:கொலை,கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ஜாபரை போலீசார் கைத்துப்பாக்கியுடன் கைது செய்தனர்.திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஜாபர்(31). திருமணம் ஆகாதவர். இவர் தனது நண்பரை சந்திக்க பழநி வந்தார். பழநி அடிவாரம் ரவுண்டானா அருகே துப்பாக்கி வைத்துக் கொண்டு தகராறு செய்வதாக அடிவாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் சென்ற போலீசார் ஜாபரை பிடிக்க முயன்ற போது, சுட்டு விடுவதாக மிரட்டினார்.

இருப்பினும் போராடிய போலீசார் அவரை பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அது இத்தாலியில் தயாரான 9 எம்.எம்., ரகத்தை சேர்ந்தது.கைது செய்யப்பட்ட ஜாபர் திண்டுக்கல் ரவுடி கரடிமணி கூட்டத்தை சேர்ந்தவர். திண்டுக்கல் மணிமாறன், நாகராஜ், பெரம்பலூர் செல்வராஜ் ஆகிய மூன்று பேரை, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த மூன்று கொள்ளைகளிலும், ஒட்டன்சத்திரம் ஆறுமுகம் என்பவரிடம் வழிப்பறி செய்த வழக்கிலும் தொடர்புடையவர். கைதான ஜாபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us