/உள்ளூர் செய்திகள்/தேனி/தீபாவளி இனாம் வசூல் கண்காணிக்க சிறப்பு குழுதீபாவளி இனாம் வசூல் கண்காணிக்க சிறப்பு குழு
தீபாவளி இனாம் வசூல் கண்காணிக்க சிறப்பு குழு
தீபாவளி இனாம் வசூல் கண்காணிக்க சிறப்பு குழு
தீபாவளி இனாம் வசூல் கண்காணிக்க சிறப்பு குழு
ADDED : அக் 07, 2011 10:45 PM
தேனி : தீபாவளி இனாம் வசூலிப்பதை கண்காணிக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட வாரியாக சிறப்புக்குழுவை நியமித்துள்ளனர்.
தீபாவளி வசூலில் தற்போது தீயணைப்புத்துறையே முன்னணியில் உள்ளது. எல்லா பெரிய மில்களிலும் தீபாவளி இனாம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ்துறை என பிறத்துறையினர் மீதும் புகார் உள்ளது. வசூலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், புகார் பெறவும் அனைத்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகங்களிலும் சிறப்பு குழுக்கள் துவங்கப்பட்டுள்ளன. இங்கு இனாம் கொடுக்கும் முன்பும், கொடுத்த பின்னரும் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


