Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு: 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்

பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு: 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்

பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு: 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்

பல கோடி ரூபாய் நிலம் அபகரிப்பு: 29 பேர் கைது :500 புகார்கள் மீது விசாரணை; பிரமுகர்கள் ஓட்டம்

ADDED : ஜூலை 13, 2011 01:39 AM


Google News

சென்னை : தமிழக மேற்கு மண்டலத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தனியார் நிலங்களை மோசடியான முறையிலும், அத்துமீறியும் அபகரித்தது தொடர்பாக, 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்ட புகார்கள் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால், நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள அரசியல் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், கைதுக்கு பயந்து தப்பியோடி விட்டனர்.



கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என, தமிழக மேற்கு மண்டல போலீசார் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்ட பின், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 631 பேர் புகார் அளித்துள்ளனர். பெறப்பட்ட புகார் மனுக்களிலுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தியதில், '51 புகார்கள் உண்மையில்லை' என தெரியவந்தது. மேலும், 56 புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஈரோட்டில் ஒருவரும், திருப்பூரில் ஒன்பது பேரும், சேலத்தில் ஆறு பேரும், நாமக்கல் மற்றும் தர்மபுரியில் தலா மூவரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 500க்கும் மேற்பட்ட புகார்களின் மீது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையறிந்து, குற்றச்சாட்டில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

* சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பழையனூரை அடுத்த அழகு உடையான் கிராமத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவருக்கு, தஞ்சங்குளம் கிராமத்தில், 7.5 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை திருப்புவனம் தி.மு.க., ஒன்றிய இளைஞரணி செயலர் முருகன், அவரது தம்பிகள் இருவர், வல்லாரேந்தல் குரூப் முன்னாள் வி.ஏ.ஓ., ஆகிய நால்வரும் சேர்ந்து, 2006 பிப்.,13 ல், போலி ஆவணங்கள் மூலம், முருகன் பெயருக்கு மாற்றியுள்ளனர். மோசடி குறித்து பெரியகருப்பன், போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி செயலர் முருகன் கைது செய்யப்பட்டார்.

* அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே, வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 35. பார்பனச்சேரி கிராம தலையாரியான இவரது அப்பாவின் உடல்நலக் குறைவு காரணமாக, அவரது வேலையை, 2006ம் ஆண்டு முதல், செந்தில்குமார் தற்காலிகமாக பார்த்து வந்தார்.



அரியலூர் மார்க்கெட் தெருவில், ராக் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த மாரிமுத்துவுடன், செந்தில்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டது. அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் இரண்டு ஏக்கர் நிலம், வாரணவாசி அருகே உள்ள அரசு புறம்போக்கில் ஏராளமாக உள்ளது குறித்து மாரிமுத்துவிடம் கூறியுள்ளார். அரியலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த முருகானந்தம், சாமிநாதன், வாரணவாசி இளங்கோவன் உள்ளிட்ட 12 பேரிடம், ஆயிரக்கணக்கில் பணம் பெற்று, அரசு நிலத்தின் மீது போலி பட்டா வழங்கியுள்ளனர்.



இதற்கிடையே பார்பனச்சேரி கிராமத்தில் உள்ள முருகானந்தம், சாமிநாதன் ஆகியோர் பெயரில், மோசடியான வகையில் போலி பட்டா தயார் செய்து கொடுத்துள்ளதாக, அரியலூர் கலெக்டர் உத்தரவுப்படி, தாசில்தார் முத்துவடிவேல் கொடுத்த புகாரின்படி, அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.போலீசார் தீவிர விசாரணையில், கடந்த நான்காண்டுகளாக, போலி பட்டா மூலம், அரியலூரை சேர்ந்த மாரிமுத்து உதவியுடன், செந்தில்குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வாரணவாசி செந்தில்குமார், அரியலூர் ராக் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் மாரிமுத்து உள்ளிட்ட இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

* கொடைக்கானலைச் சேர்ந்த சேவியர் மைக்கேலின், கோஹினூர் பங்களா அருகே, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு ஏக்கர் நிலம், வீட்டை அபகரிக்க, 'கட்டப்பஞ்சாயத்து' செய்ததாக, கொடைக்கானல் நகராட்சி முகமது இப்ராகிமை, நேற்று காலை 6 மணிக்கு, போலீசார் கைது செய்தனர்.



- நமது நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us