ADDED : அக் 08, 2011 10:50 PM
அம்பிளிக்கை : திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை அருகே சிந்தலப்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிடர், சிவராமன், 45.
நேற்று காலை 8.30 மணிக்கு, இடையகோட்டை பழனிச்சாமியுடன், பிளாட்டினா பைக்கில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து கள்ளிமந்தையம் சென்றனர். (ஹெல்மெட் அணியவில்லை). தாராபுரம் ரோடு பாறைவலசு பிரிவு அருகே, பின்னால் வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மோதியது. இருவரும் அதே இடத்தில் இறந்தனர். இன்ஸ்பெக்டர் இளவரசு விசாரிக்கிறார்.


