/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் டீலர்கள் சந்திப்பு விழாநெல்லையில் டீலர்கள் சந்திப்பு விழா
நெல்லையில் டீலர்கள் சந்திப்பு விழா
நெல்லையில் டீலர்கள் சந்திப்பு விழா
நெல்லையில் டீலர்கள் சந்திப்பு விழா
ADDED : செப் 03, 2011 02:47 AM
திருநெல்வேலி:நெல்லையில் டீலர்கள் சந்திப்பு விழா நடந்தது.நெல்லையில்
ஏவிஎம்என்.,எண்டர்பிரைசஸ் மற்றும் மும்பை பிரின்ஸ் பைப்ஸ் பிட்டிங்ஸ்
நிறுவனம் இணைந்து தங்களது டீலர்கள் சந்திப்பு விழாவை நடத்தியது.
ஏவிஎம்என்.,எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நாகராஜன் தலைமை வகித்தார். பிரின்ஸ்
பைப்ஸ் பிட்டிங்ஸ் நிறுவனம் மதுரை கிளை மேலாளர் குமரேசன் முன்னிலை
வகித்தார்.ஏரியா மேலாளர் கிருஷ்ண மூர்த்திபாலாஜி வரவேற்றார்.
மாநில மேலாளர்
கோவிந்தராஜ் பேசுகையில்,''கம்பெனியின் புராடக்ட் தயாரிப்பு மற்றும் அதன்
குவாலிட்டி, கம்பெனியின் வளர்ச்சி, நோக்கங்கள் குறித்து பேசினார்.''மதுரை
கிளை மேலாளர் குமரேசன் பேசுகையில்,''மழை நீர் சேகரிப்பு,விவசாயகம், சுடு
தண்ணீர், மார்டன் பிளம்பிங் டெக்னாலஜி குறித்து பேசினார்.''
ஏவிஎம்என்.,எண்டர்பிரைசஸ் நாகராஜன், ஏரியா மேலாளர் பாலாஜி
சிறப்புரையாற்றினர். விழாவில் கலந்துகொண்ட அனைத்து டீலர்களுக்கும் நினைவு
பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், ரமேஷ் கண்ணா, நெல்லை மற்றும் தூத்துக்குடி
மாவட்ட டீலர்கள், பிரின்ஸ் பைப்ஸ் ஊழியர்கள், ஏவிஎம்என்.,எண்டர்பிரைசஸ்
ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏவிஎம்என்.,நாகராஜன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஏவிஎம்என்.,எண்டர்பிரைசஸ் ஊழியர்கள் செய்தனர்.


