/உள்ளூர் செய்திகள்/சென்னை/மகனின் உடல் உறுப்புகள் தானம் செய்த விவசாயிமகனின் உடல் உறுப்புகள் தானம் செய்த விவசாயி
மகனின் உடல் உறுப்புகள் தானம் செய்த விவசாயி
மகனின் உடல் உறுப்புகள் தானம் செய்த விவசாயி
மகனின் உடல் உறுப்புகள் தானம் செய்த விவசாயி
ADDED : செப் 17, 2011 10:30 PM
சென்னை : காஞ்சிபுரம் அருகே, விபத்தில் இறந்த விவசாயி மகனின் உடல் உறுப்புகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பராயன்; இவரது மகன் செல்வம், 23.
தந்தையுடன் சேர்ந்து இவரும் விவசாயம் செய்து வந்தார்.கடந்த 14ம் தேதி, பைக்கில் மதுராந்தகத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபைல் போனில் பேசியபடியே, எதிரே பைக்கில் வந்தவர், செல்வம் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதினார்.இதில், தலையில் பலத்த காயமடைந்த செல்வம், சென்னை தனியார் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு நாள் சிகிச்சைக்கு பின்னும், செல்வத்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், அரசு மருத்துவமனைக்கு செல்வத்தை கொண்டு செல்லும்படி கூறிவிட்டனர்.சென்னை, ராஜிவ் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள், மூளை சாவு ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்ட செல்வத்தின் பெற்றோர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செல்வத்தின் உடல் உறுப்புகளை தானமாக பெற்றுக் கொண்டனர்.செல்வத்தின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தது பற்றி, அவரது சகோதரர் வேலு கூறியதாவது: செல்வம் உயிருடன் இருந்தால், எங்கள் குடும்பத்துக்கு பெரும் துணையாக இருந்திருப்பான். இறந்த பின்னும் அவனது உடல் உறுப்புகள் மூலம் யாராவது ஒருவர் பயனடைந்தால் மகிழ்ச்சி.உடல் உறுப்புகள் தானமாக கேட்டு, நாளிதழ்களில் செய்யப்படும் விளம்பரங்களை பார்த்திருக்கிறோம்.இதுவே, செல்வத்தின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க எங்களைத் தூண்டியது.இவ்வாறு வேலு கூறினார்.