ADDED : ஆக 03, 2011 01:17 AM
கோவை : நள்ளிரவில் ரயில்வே ஸ்டேஷனில் தவித்த கேரள சிறுவனை போலீசார் மீட்டனர்.
கோவை ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., அமிர்தம் தலைமையிலான குழு, இரண்டாவது பிளாட் பாரத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு நின்றிருந்த 8 வயது சிறுவனை மீட்டு, விசாரித்தனர். அச்சிறுவனுக்கு மலையாளம் மட்டுமே தெரிந்ததால், போலீசார் மலையா ளத்தில் விசாரித்தனர். விசா ரணையில், கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த சங்கரின் மகன் காளிதாஸ்(8) என தெரிந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,போத்தனூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.