/உள்ளூர் செய்திகள்/தேனி/"நன்றிக்கடனுடன் பணி முடிப்பேன்' : தே.மு.தி.க., வேட்பாளர் வேல்முருகன்"நன்றிக்கடனுடன் பணி முடிப்பேன்' : தே.மு.தி.க., வேட்பாளர் வேல்முருகன்
"நன்றிக்கடனுடன் பணி முடிப்பேன்' : தே.மு.தி.க., வேட்பாளர் வேல்முருகன்
"நன்றிக்கடனுடன் பணி முடிப்பேன்' : தே.மு.தி.க., வேட்பாளர் வேல்முருகன்
"நன்றிக்கடனுடன் பணி முடிப்பேன்' : தே.மு.தி.க., வேட்பாளர் வேல்முருகன்
ADDED : அக் 13, 2011 09:57 PM
தேனி : 'மக்கள் பணிகளை நன்றிக்கடன் பட்டு செய்து முடிப்÷ன்' என, தேனி அல்லிநகரம் நகராட்சி 2வது வார்டில் கொட்டும் முரசு சின்னத்தில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் ஜி.வேல்முருகன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தெலுங்கு பஜார் தெருவில் இருக்கும் தண்ணீர் டேங்க் அறையை சரி செய்து 24 மணி நேரமும் தண்ணீர் சப்ளை செய்யப்படும். நக்கீரர் தெருவில் சாக்கடை வசதி செய்து தருவேன். மருத்துவர் தெருவில் பிளாட்பாரத்தை சரிசெய்து, சாக்கடை பாலம் கட்டித்தருவேன். பொம்மைய கவுண்டன்பட்டி பஸ்ஸ்டாண்டில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்வேன். நக்கீரர் தெரு,கிருஷ்ணன்கோவில் பின்புறம் நவீன கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும். கோமாளி தெருவில் ரோடு வசதி செய்யப்படும்.தியாகராயர் தெருவில் போர் அமைத்து சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் வசதி செய்து தருவேன். இளைஞர்களுக்கான உடல் திறன் மையம் அமைப்பது. நூலகத்தை சீரமைத்து நவீனப்படுத்தும் பணிகளை செய்வேன். வார்டு மக்கள் பிரச்னைகளை என் பிரச்னையாக கருதுவேன். கூப்பிட்ட குரலுக்கு குரல் கொடுக்கும் தொண்டனாக எந்நாளும் பணியாற்றுவேன். (தொடர்புக்கு 98428 49921) சொந்த செலவில் வார்டு பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிப்பேன்,' என்றார்.


