/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஏரலில் களக்காடு வாலிபர் வெட்டி கொலை : தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணைஏரலில் களக்காடு வாலிபர் வெட்டி கொலை : தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை
ஏரலில் களக்காடு வாலிபர் வெட்டி கொலை : தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை
ஏரலில் களக்காடு வாலிபர் வெட்டி கொலை : தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை
ஏரலில் களக்காடு வாலிபர் வெட்டி கொலை : தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை
ADDED : ஆக 01, 2011 02:27 AM
ஏரல் : ஏரல் ஆற்றுப்பகுதியில் களக்காட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பே õலீசார் தனிப்படை அø மத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆற்றுப்பகுதியில் 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறி த்து தகவல் அறிந்த ஸ்ரீவை., டிஎஸ்பி. ஸ்டீபன் ஜேசுபாதம், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் களக்காடு கிரிகோவிந்தசேரியை சேர்ந்த இளையபெருமாள் மகன் துரைராஜ்(33) என்பது தெரியவந்தது. துரைராஜ் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏரல் கோயிலில் நேர்த்திக்கடனாக மொட்டை போட்டு விட்டு, அன்று இரவு ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் துரைராஜை ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள் ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தனிப்படை அø மத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஏரல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.