/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேட்பாளரின்றி பா.ம.க., திணறல் அ.தி.மு.க., உற்சாகம்வேட்பாளரின்றி பா.ம.க., திணறல் அ.தி.மு.க., உற்சாகம்
வேட்பாளரின்றி பா.ம.க., திணறல் அ.தி.மு.க., உற்சாகம்
வேட்பாளரின்றி பா.ம.க., திணறல் அ.தி.மு.க., உற்சாகம்
வேட்பாளரின்றி பா.ம.க., திணறல் அ.தி.மு.க., உற்சாகம்
ADDED : செப் 30, 2011 01:49 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு
உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பா.ம.க.,வுக்கு ஆள் கிடைக்காதது அ.தி.மு.க.,
வினரை உற்சாகமடையச் செய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க.,விற்கு
செல்வாக்கு மிக்கது சேத்தியாத்தோப்பு பகுதியாகும். கட்சியின் போராட்டங்கள்,
அரசியல் நிகழ்ச்சிகள் சேத்தியாத்தோப்பை மையப்படுத்தியே நடத்தப்பட்டன.
இங்கு நடந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தான்
பேசும் போது சொடக்கு போட்டால் ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் கூடும் பகுதி என
பேசுவார். அந்த அளவிற்கு பா.ம.க., செல்வாக்குள்ள சேத்தியாத்தோப்பில்
உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு
போட்டியிட ஆள் கிடைக்காமல் பா.ம.க., ஆட்களை தேடும் படலத்தில்
இறங்கியுள்ளது.தேர்தல் அறிவித்ததில் இருந்து கடந்த ஒரு வார காலமாக
பா.ம.க.,வினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட
ஆளில்லாத பரிதாப நிலையும் வார்டு உறுப்பினர் பதவிகளில் 15 வார்டுகளில்
நான்கு வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் களம் இறங்கும் நிலையால்
பா.ம.க., தள்ளாட்டத்திற்குள்ளாகி உள் ளது. இதனால் அ.தி.மு.க., வினர்
உற்சாகம் அடைந்துள்ளனர்.