/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பள்ளி மாணவர்கள் துப்புரவு பணிதென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பள்ளி மாணவர்கள் துப்புரவு பணி
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பள்ளி மாணவர்கள் துப்புரவு பணி
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பள்ளி மாணவர்கள் துப்புரவு பணி
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பள்ளி மாணவர்கள் துப்புரவு பணி
ADDED : செப் 13, 2011 12:16 AM
தென்காசி : தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியில் ஐசிஐ பள்ளி என்.எஸ்.எஸ்.
மாணவர்கள் ஈடுபட்டனர். தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் வழிகாட்டுதலின்படி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பாக்கியநாதன் தலைமையில் ஆசிரியர்கள் செல்வராஜ், சாதிக்அலி ஆகியோரின் உதவியுடன் பள்ளியின் என்.எஸ்.எஸ்.மாணவர்கள் 20 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 2 தினங்களாக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விஷச்செடிகள், முட்செடிகள், பிளாஸ்டிக் பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். துப்புரவு பணிகளை மேற்கொண்ட என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அருள்மொழி, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் லெட்சுமி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.


