Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/போப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

போப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

போப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

போப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ADDED : ஜூலை 23, 2011 03:22 AM


Google News
சாயர்புரம்: சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு சாயர்புரம் சபை மன்ற தலைவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்தார்.

பள்ளி தலைமையாசிரியர் தங்கம் வரவேற்றார். வாகைக்குளம் ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் வக்கீல் ராஜரத்தினம் கலந்து கொண்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தமிழ் ஆசிரியர் ராபின்சன் பாலசிங் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராய்பென்னி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us