ADDED : ஆக 01, 2011 05:21 AM

புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு, தெலுங்கானா விவகாரம் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சியினர் எழுப்ப தயாராகி வருகின்றனர்.இதைச் சமாளிக்கும் விதம் குறித்து, ஆலோசனை நடத்துவதற்காக, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.
சோனியாவுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோன்று, விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றையும், சோனியா ஒத்தி வைத்துள்ளார்.