வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழா
வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழா
வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜூலை 26, 2011 10:17 PM
சிதம்பரம் : சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் உலக வேதியியல் ஆண்டு மற்றும் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது.
உலக வேதியியல் ஆண்டை முன்னிட்டு நடந்த ஓவியம் மற்றும் வினாடி வினா போட்டியில் 28 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் தலைமை ஆசிரியர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். வேதியியல் ஆசிரியர் சங்கரன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன் போட்டிகளை துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர் சிவகுரு பரிசு வழங்கினார்.
ஓவியப்போட்டியில் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தீபிகா முதல் இடமும், திவ்யா இரண்டாம் இடமும், நிர்மலா பள்ளி மாணவன் ரோஹித் மூன்றாமிடம் பிடித்தனர். வினாடி வினா போட்டியில் நிர்மலா பள்ளி மாணவிகள் பத்மஸ்ரீ, கிருபா முதலிடம், முஸ்தபா பள்ளி மாணவர்கள் தையூப் நாஜி, சையத் காதர் இரண்டாமிடமும், அரசு மகளிர் பள்ளி மாணவிகள் விஜயப்பிரியா, கலைமுகில் மூன்றாமிடமும் பெற்றனர். பல்வேறு தலைப்புகளில் அறிவியில் கண்காட்சி அமைத்திருந்தனர். அதில் சிறப்பான கண்காட்சி செய்திருந்த மாணவர்களுக்கு உதவி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் பரிசு வழங்கினார்.